வடக்கின் கல்வித் தரவு முகாமைத்துவம் வளர்ச்சிப் பாதையின் படியில் …
கல்வி அபிவிருத்திக்கு, திட்டமிடலுக்கு, நிர்வாகத்திற்குத் தரவுகள் மிக அவசியமானவையாகின்றன. வடக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் ஆரம்ப காலத்தில் காகிதப் படிவங்களைப் பாடசாலைகளுக்கு விநியோகித்துத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. நேரம், நம்பகத்தன்மை, கணிப்புக்களை மேற்கொள்ள முடியாமை போன்ற பல தடைகளை அடுத்து,
தரவுகளைச் சேகரிப்பதற்கு ஒரு தரவுத் தளம் உருவாக்கப்பட்டது. அத் தரவுத் தளத்தினை வலயங்களுக்கு இறுவெட்டுக்களில் வழங்கி குறித்த காலத்தின் பின்னர் அத் தரவுத் தளங்களை மீள இறுவெட்டுக்களில் பெற்றுச் சேர்த்து அத்தரவுத் தளம் பயன்படுத்தப்பட்டது. தரவுகளின் நம்பகத்தன்மை, பாடசாலைகளில் இருந்து தரவுகளைப் பெறுவதற்கு வலயங்கள் கையாண்ட பொறிமுறைகள் வேறுபட்டமை, தரவுத் தளத்தினைக் கையாளுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப இடர்ப்பாடுகள், சில வலயங்கள் உரிய நேரத்தில் தரவுத் தளங்களைப் பூரணப்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள், தரவுகள் சரியான முறைமையில் தரவேற்றம் செய்யப்படாமையால் தரவுகளைச் சேர்க்க முடியாமை போன்ற பல காரணங்களால் இம் பொறிமுறை சவால்மிக்கதாயிற்று.
2010 இல் இருந்து கோட்டக் கல்விப் பணிப்பாளர்களை தரவு முகாமைத்துவத்தில் உட்படுத்தி இரு மாதங்களுக்கு ஒரு முறை உள்ளக வலையமைப்புப் பொறிமுறை மூலம் பாடசாலைத் தரவுகள் கணனிமயப்படுத்தப்பட்டு, வடக்கு மாகாணத்தின் கல்வி சார் அடிப்படைத் தரவுகள் மென்பிரதிகளாகவும், சிறிய கையேட்டு நூல்களாகவும் வெளியிடப்பட்டு வந்தன. இவ்வருட ஆரம்பத்தில் இணைய வழி இயங்கு தள மென்பொருள் முறைமை உருவாக்கப்பட்டு மாசி மாத இறுதி வாரங்களில் கோட்ட மட்டங்களில் பரீட்சார்த்தத் தரவேற்றம் செய்யப்பட்டு தற்போது பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
උතුරු පළාත් අධ්යාපන දත්ත කළමණාකරණ ව්යාවහාර වල පරිණාමය...
කාර්ර්යක්ෂම අධ්යාපන සංචර්ධන සැලසුම්කරණ ක්රියාචලියේදි දත්ත හා තොරතුරු ඉතා ප්රබල සාධකයක්ච පවති. දත්ත රැස් කිරීම සම්බන්ධච කලින් අනුගමනය කරන ලද මුද්රිත පෝරම වලින් තොරතුරු රැස් කිරීම ඉතා ප්රමාදය. දත්ත අස්ථානගතවීම හා අධික කාලයක් ගැනීම වැනි අඩුපාඩු දක්නටලැබුණි. එබැවිත් තනි අංකික දත්ත සමුදායක් නිර්මාණය කරන ලද අතර දත්ත රැස් කිරීම සංයුුක්ත තැට් මගින් සිදුකරන අතර මෙම තැට් කලාප අධ්යාපන කාර්යාල වලට බෙදා හරින අතර ඒවාට අමුදත්ත ඇතුළත් කිරීමෙන් පසු සුවිශේෂි කාලපරාසයන්හිදි ආපසු එවිය යුතුය.පෙර පැවති ක්රමයට වඩා මෙය වාසිදායක වුවත් පරිගණකයේදී ඇති වන තාක්ෂණික දුෂ්කරතා හා පාසල් වල අමුදත්ත රැස් කිරීමේ ප්රවේශයන් හා ප්රමාදයක් වැනි අඩුපාඩු තවමත් පවති. මෙම අභියෝග සැලකිල්ලට ගෙන ප්රාදේශියව බෙදා හැරෙන මාර්ගගත නොවන දත්ත සමුදායන් ස්ථාන දෙකක පවත්වාගෙන යාමට උත්සාහ දරන අතර නිලධාරීන් මෙම ස්ථාන වල භෞතිකව දත්ත ඇතුළත් කිරීම කළ යුතුය.
කොට්ඨාස අධ්යපන නිලධාරින් පාසලට වඩාත් කිට්ටු කළමණාකරුවන් වන බැවිත් දත්ත රැස් කිරීමේ හා දත්ත සමුදායත් යාවත්කාලින කිරීමේ වගකීම ඔවුන් මත පැවරේ. ඔවුන් අර්ධ මාසිකව මෙම දත්ත සමුදාය යාවත්කාලින කළ යුතුය.මෙම දත්ත සමුදාය පදනම් කොටගෙන ප්රබල සංඛ්යා ලේඛන ප්රකාශයක් අර්ධ මාසිකව 2010 සිටම නිකුත් කෙරේ. දැන් මෙම මාර්ග ගත දත්ත සමුදාය පරිපූර්ණ අධ්යපන කළමණාකරණ තොරතුරු පද්ධතියක් කරා ගමන් කිරීමේ අරමුණින් හඳුන්වා දෙනු ලැබේ.
Evolving Northern Education Data Management Practice
Data and information are very vital factors of efficient education planning, development and management processes. The earlier practice of collecting data through printed forms had its drawbacks such as delays, data losses and time consuming processing methods. Therefore a standalone digital data base was designed and the data collection was administered through compact discs which were distributed among Education Zones to enter their raw data at their offices and return in a specified time interval. Even though this method was advantageous than the earlier methods it still had several shortfalls such as technical difficulties in handling, different approaches of raw data collection from schools and processing delays. Considering these challenges it was attempted to maintain an offline locally distributed data base in two locations to which the officials should physically travel and enter data. As the Divisional Education Officials are the nearest managers to schools they were entrusted with the responsibility of collecting data and updating these data bases. They could update the system bimonthly. Based on this data base, a bimonthly publication of vital statistics has been issued since 2010. And now this online data base is introduced with the view to progress towards a comprehensive education management information system.